Posts

Elements of Financial Statement

ELEMENTS OF FINANCIAL STATEMENT:                                 In this article, we will discuss the some key basic elements of Financial Statement and its accounting treatment. Some of the key basic elements are                                                 i) Income / Revenue                                                 ii) Expenses                                                iii) Assets                                             ...

Golden rules of Accounting

Introduction                                                           All business entities must present it's financial statements to all its stakeholders. The information provided in the financial statement must be accurate and present in a true and fare picture of the entity. For this presentation, it must account all its transactions. Since economic entities are compared to understand their financial status, there has to be uniformity in accounting. To bring that uniformity, the golden rules of accounting will help us. These rules form the very basis of passing journal entries which is the first step of accounting and book keeping.  Types of Accounts:                             Let's discuss the three types of accounts in the Financial statement.  1. Perso...

இந்தியாவின் கதை : முடிவுரை

                                இந்தியாவை பந்தாடி விட்டு திரும்பி சென்ற நாதிர்ஷா எட்டு ஆண்டுகள் கழித்து ஒரு பாரசீக கொலையாளியின் தனிப்பட்ட குருவாளுக்கு பலியானார். அவர் விட்டு விட்டுப் போன அகமது ஷா அப்தாலி எனும் வீரர் 16 அடி பாய்ந்தார். நாதிர் ஷாவின் பிரதான தளபதிகளுள் ஒருவர் இந்த அகமது ஷா. எஜமானின் மறைவுக்கு பின்னர் ஆப்கானிஸ்தானில் காபுல் கந்தகார் உள்ளிட்ட பகுதிகளை வென்று ஆட்சி அமைத்தார் இந்த வீரர். ஏற்கனவே நாதிர்ஷாவுடன் டெல்லிக்கு வந்து குஷி கண்ட இந்த புலி தன் பங்குக்கு இந்திய மண் மீது குறி வைத்தது. 1748 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1761 வரை ஐந்து முறை இந்தியாவுக்கு படையெடுத்தார் ஆப்தாலி. 1748 இல் 12 ஆயிரம் வீரர்கள் அடங்கிய படையுடன் இந்தியாவில் நுழைந்த அவரை முகலாய பாதுஷா முகமது ஷாவின் வாரிசான அகமதுஷா படையெடுத்து அவரை சமாளித்து விரட்டி அடித்தார். 1750 இல் மறுபடியும் இந்திய எல்லைக்குள் நுழைந்த அப்தாலி, பஞ்சாப் பிரதேசத்தை வெற்றிகரமாக கைப்பற்றினார். அவரது அடுத்த படை எடுப்பில் காஷ்மீர் ஆப்கானியர் வசம் வீழ்ந்தது.  ...

இந்தியாவின் கதை : மொகலாய சாம்ராஜ்யத்தின் முடிவுரை

                                                             வரலாற்றில் சில விதிவிலக்குகள் இருந்தாலும், பொதுவாக சாம்ராஜ்ஜியங்கள் சட்டென்று முடிவு பெறாது. இருண்ட காலம் இருந்தாலும் மீண்டும் வரும் தன்மை கொண்டதாக இருக்கும். அந்த பரிதாப நிலை தான் ஔரங்கசீப் மறைவிற்குப் பின் மொகலாய சாம்ராஜ்யம் சந்தித்தது. ஔரங்கசீப் மறைவிற்குப் பிறகு அரியணையில் அமர்ந்த யாவருக்கும் நட்சத்திர அந்தஸ்து கிட்ட வில்லை. ஒரு சிலர் சில ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஒரு சிலர் சில நிமிடமே காட்சி தந்து எரிந்து மறையும் எரி கல்லை போல மாண்டு போயினர். பருந்துகள் வசித்த இடத்தில் இனி ஆந்தைகள் வசிக்கப் போகின்றன. குயில்கள் பாடிய இடத்தில் இனி காகங்கள் பாட போகின்றன. ஔரங்கசீப் இறந்தபோது அவரது மகன்கள் ஒவ்வொரு பிரதேசத்திலும் கவர்னராக இருந்தனர். மூத்த மகன் ஷா ஆலம் காபூலிலும், இரண்டாவது மகன் ஆசாத் குஜராத்திலும் கடைசி மகன் காம்ப்க்க்ஷ் பீஜப்பூரிலும்  இருந்தனர். மறைந்த பாதுஷா விரும்பியபட...

இந்தியாவின் கதை : ஔரங்கசீப்

                                       ஆக்ரா கோட்டையை வசப்படுத்தி தன் தந்தையை சிறைப்படுத்தி அரியணையில் அமர்ந்தார் ஔரங்கசீப். தனது வேண்டாத மகன் தற்போது வெற்றி வீரனாக மாறியதை தந்தையின் கண்ணில் பார்க்க ஆசை பட்டார் ஔரங்கசீப். ஆனால் பழைய பாதுஷா ஷாஜகானுக்கு தற்போதும் சில இராஜ விசுவாசிகள் இருப்பதாகவும், தந்தையை சந்திக்கச் சென்றால் தங்களை கொலை செய்ய திட்டம் வைத்திருப்பதாகவும் உளவு செய்தி வந்தது. அதனால் தன் தந்தையை சந்திக்கும் முடிவை தற்போதைக்கு தள்ளி வைத்தார்.                               ஜோதிடர்கள் நல்ல நாள், நேரம் பார்த்து சொல்ல, ஜூலை 21, 1658 - இல் டெல்லி செங்கோட்டையில் பரந்து விரிந்த தோட்டத்தில் எளிமையான முறையில் "ஆலம்கீர்" என்ற பட்டத்துடன் முடி சூட்டிக்கொண்டார். விருந்து, கொண்டாட்டம், வான வேடிக்கை என நேரத்தை வீனடிக்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று களத்தில் இறங்கினார். அதுதான் ஔரங்கசீப். தன் அண்ணன்கள் மீது பார...

இந்தியாவின் கதை : ஷாஜகான்

             சக்கரவர்த்தி ஜஹாங்கீர் கண்ணை மூடியதும் நாட்டில் கோஸ்டி பூசல் மற்றும் அதிகாரச் சண்டை வெளிப்படையாகவே வெடித்தது. பாதுஷா மறைந்த நேரம் இளவரசர் ஷாஜகான் தெற்கே தட்சிணப் பிரதேசத்தில் இருந்தார். இதை  பயன்படுத்திக் கொள்ள நினைத்த நூர்ஜகான், தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் தன் முதல் மகளின் கணவரான ஷாரியாருக்கு பட்டம் சூட்ட திட்டமிட்டார். அதற்காக தெற்கிலிருந்து ஷாஜகான் வருவதற்குள் லாகூரில் இருந்து ஷாரியார் ஆக்ரா வரவேண்டும் என்று செய்தி அனுப்பினார் நூர்ஜகான். ஆனால் மகாராணி நூர்ஜகானின் சகோதரர் அஸஃப் கான் தற்போது இளவரசர் ஷாஜகானுக்கு மாமனார், அதாவது மும்தாஜின் தந்தை.                      அஸஃப்கான், மருமகனான ஷாஜகானுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார். முதல் படியாக சகோதரி நூர்ஜகானிடம் இருந்த ஷாஜகானின் பிள்ளைகளான தாரா ஷூகோ, ஷாஷூஜா மற்றும் ஔரகங்கசீப் பை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். பின்னர், ஷாஜகானின் அண்ணனான மறைந்த குஸ்ரூவின் மகனான தவார் பக்ஷ் என்ற அப்பாவி இளைஞனுக்கு பட்டம் சூட்டி டெல்லி அரிய...