இந்தியாவின் கதை : லோடி சாம்ராஜ்யம்

                                                டெல்லியில்  இரத்த ஆறு ஓட விட்டு, தைமூர் இந்தியாவை விட்டு சென்ற பிறகு டெல்லியில் நடமாடுவதற்கு கூட ஆள் இல்லை. எங்கு பார்த்தாலும் பிணங்களும் மரண ஓலமும் இருந்தன. அதன் பிறகு போட்டி மன்னர்களின் ஒருவரான மகமது ஷா தலை மறைவிலிருந்து வெளிவந்து டெல்லி வீதிகளை பெயரளவுக்கு சுத்தம் செய்துவிட்டு ஆட்சி என்ற பெயரில் ஏதோ சில ஆண்டுகள் சமாளித்தார்.  கி.பி.1412 -இல் அவர் இறந்த பிறகு துக்ளக் சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.  அதைத்தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு சுல்தான் இல்லாமல்  தவுலத் கான் லோடி என்ற பிரபுவின் நிர்வாகத்தின் கீழ் டெல்லி இருந்தது.  தைமூர் இந்தியா வந்தபோது  அவருக்கு வெள்ளைக்கொடி காட்டி சேர்ந்து கொண்ட சிலரை சில மாகாணங்களுக்கு ஆளுநர்களாக நியமித்திருந்தார். அவ்வாறு முல்தான் மற்றும் லாகூருக்கு ஆளுநராக  நியமிக்கப்பட்டிருந்தவர் தான் கிஜிர்கான். கிபி 1414 இல் லாகூரில் இருந்து ஒரு சிறிய  படையுடன் வந்து டெல்லியை கைப்பற்றி  சுல்தானாக அமர்ந்தார்.   இவரும் இவரது வாரிசுகளும் டெல்லியை 37 ஆண்டுகள் ஆட்சி  செய்தனர்.  இந்த காலகட்டத்தில் டெல்லியின்  எல்லை மிகவும் சுருங்கி போனது.  அலாவுதீன் கில்ஜி காலத்தில் வடக்கே சிந்து மாகாணத்தில் இருந்து கிழக்கில் வங்காளம் வரையிலும், தெற்கே மதுரை வரையிலும் பரந்து விரிந்திருந்த சாம்ராஜ்யம், ஆனால் தற்போது டெல்லியை சுற்றி  ஒன்பது மைல்கள்  தான் டெல்லி எல்லை என்றால் புரிந்து கொள்ளுங்கள். இந்த காலகட்டத்தில் அதே  லாகூரில் ஆளுநராக  நியமிக்கப்பட்டிருந்தவர்  பலூல் லோடி. லாகூரில் இருந்து படை திரட்டி வந்து டெல்லியை கைப்பற்றினார்.   லாகூரில் ஆளுநராக இருந்து டெல்லியை கைப்பற்றி அவரால் லாகூருக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டவர் அதே டெல்லியை கைப்பற்றி, விதி வலியது என வரலாற்றில்  மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டது.  பலூல் லோடி தான் லோடி சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டார்.  சுத்தமான ஆப்கானிய  இரத்தத்தில் உருவாக்கப்பட்ட அரசு டெல்லியில் அமர்ந்தது. ஏறத்தாழ 30 ஆண்டுகள் ஆட்சியில் சிறப்பாகவும் குறும்புத்தனம் கொண்டும் ஆட்சிபுரிந்து எல்லையை விரிவாக்கம் செய்தார். 


அவருக்குப்பின் ஆட்சிக்கு வந்தவர் அவரது மகன் சிக்கந்தர் லோடி.  தன் தாய் ஒரு இந்துவாக இருந்தாலும் இந்துக்கள் மீது  வெறுப்பை  மட்டுமே காட்டினார் தான் செல்லும் வழியில் இருக்கும் கோயில்கள் அனைத்தையும் இடித்து விட்டே பயணம் செய்வார். யமுனை நதிக்கரையில் இந்துக்கள் குளிக்க கூடாது எனவும் உத்தரவிட்டார் இருப்பினும் இவர் ஒரு சிறந்த வீரர் பீகார் மால்வா போன்ற பகுதிகளை வென்று வென்று டெல்லியின் எல்லையை விரிவுபடுத்தினார் இவர் ஓர் சிறந்த நிர்வாகத்திறமை கொண்ட மன்னர் ஒவ்வொரு ஆண்டும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை மக்களின் விபரம் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையும் இலவச உணவும் வழங்கப்பட்டது. கி.பி. 1504 - இல் டெல்லிக்கு அருகே ஆக்ரா எனும் புதிய நகரை நிர்மாணித்தவர் இவர்தான். கி.பி. 1505 ஜூலை ஆறாம் தேதி டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பயங்கரமான பூகம்பம் நிகழ்ந்தது. முகலாய சாம்ராஜ்யத்தின் தொடக்கத்திற்கான நேரம் வந்துவிட்டதாக காலம் உணர்த்திய குறிப்பு இது என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவதுண்டு.

 


சிக்கந்தர் லோடி இறந்த பிறகு பட்டத்திற்கு வந்த அவரது மகனான இப்ராஹிம் லோடி சிறந்த வீரராக திகழ்ந்தாலும்  முன்கோபம் காரணமாக தன் முடிவை மட்டுமில்லாமல் லோடி சாம்ராஜ்ஜியத்தின் முடிவையும் தேடிக்கொண்டார். ஆப்கானிய பிரபுக்கள் பொதுவாகவே மிகுந்த விசுவாசம் கொண்டவர்கள்  அவர்களையும் கூட விட்டுவைக்காமல் மிகுந்த கடுமை யுடனும் மோசமாகவும் நடத்தியதால் பிரபுக்கள் மத்தியில் கிளர்ச்சி மூண்டது ஒரு ரகசிய கூட்டம் கூட்டப்பட்டு சுல்தானை ஒழித்துக் கட்ட முடிவு எடுக்கப்பட்டது ஆனால் அதற்கு ஒரு சிறந்த வீரர் வேண்டும் என்று கருதினர் அதற்காக அவர்கள் தேர்வு செய்தது அண்மையில் காபூலை  வெற்றிகொண்டு ஆட்சி செய்து வரும்  மன்னர்.  இந்த பிரபுக்கள் ஒரு கடிதம்  எழுதினர் டெல்லி சுல்தான் சுல்தானை ஒழித்துக்கட்ட தங்கள் உதவி தேவை என எழுதி  அனுப்பிய கடிதம் ஆப்கானிஸ்தானின் காபூல் 

 நகரை அடைந்தது. 


 காபூல் அரியணையில் அமர்ந்தவாறு தனக்கு நீண்ட நாட்களாக இந்தியா மீது படையெடுக்க வேண்டும் என ஆசை என்று சொல்லிக்கொண்டிருந்த மன்னரிடம் இந்தியா வாருங்கள் என்ற அழைப்பிதழ் கிடைத்தது. உடனே வாய்விட்டு சிரித்த அந்த மன்னரின் பெயர் வரலாற்று சிறப்புமிக்க சாம்ராஜ்யமான முகலாய சாம்ராஜ்யத்தின் நிறுவனர் மாமன்னர் சுல்தான் பாபர்.  ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் தொடக்கம் அடுத்த  அத்தியாயத்தில் தொடங்கும்.


Comments

Popular posts from this blog

இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

Ways to reduce my Tax

UDYAM - Whether a boon or bane for MSMEs