தர்மத்தின் மகத்துவம்
தர்மம் என்ற வார்த்தையின் பொருளை, மகாபாரதம் வாயிலாக மட்டுமே முழுமையாக உணர முடியும். மகாபாரத போரில், கிருஷ்ணர் செய்த சூட்சுமங்களில் மிகவும் பெரிது எது என்றால், சிலர் பீஷ்மரை வீழ்த்த போட்ட திட்டம் என்றும், இன்னும் சிலர் கர்ணனை வீழ்த்த போட்ட திட்டம் என்றும் கூறுவர். ஆனால் உண்மையில், மகா மந்திரி விதுரரை வீழ்த்த போட்ட திட்டமே, மிகவும் அற்புதமானது.
விதுரர் எங்கே போரிட்டார்? அவரை எப்படி கிருஷ்ணர் வீழ்த்தினார்? என நினைக்கிறீர்களா?? சொல்கிறேன்.
பீஷ்மரோ, துரோனாச்சாரியரோ, கர்ணனோ, ஏதோ ஒரு இடத்தில் அதர்மம் புரிந்தவர்களே. ஆதலால், அவர்களை வீழ்த்த அவர்கள் செய்த அதர்மத்தின் பலனையே, கிருஷ்ணர் தன் பலமாக மாற்றினார். ஆனால் விதுரரோ, எந்த அதர்மமும் புரியவில்லை. சூதாட்ட மேடையில், கௌரவர்களுக்கு எதிராகவும், குலமகள், சக்ரவர்த்தினி பாஞ்சாலிக்கு ஆதரவாகவும் வாதிட்டவர் விதுரர் மட்டுமே.
அன்று அவர் செய்த இந்த தர்மத்தால், அவர் மகாபாரத போரில் இறக்க கூடாது என்று நிர்ணயம் செய்ய பட்டு விட்டது. விதுரரோ தன் அண்ணணுக்காக போர்க்களம் நிச்சயம் வருவார். அப்படி அவர் களத்திற்கு வந்து நின்றால், அவரை அர்ச்சுனனாலும் வெல்ல முடியாது. காரணம், விதுரரின் வில், விஷ்னுவின் வடிவமான "கோவர்தன வில்". இது அர்ச்சுனனின் வில்லான காண்டிபத்தை விட சக்தி வாய்ந்தது. அவரை போரில் வெல்ல முடியாது என்று உணர்ந்த கிருஷ்ணர், விதுரரை போரில் இருந்து விலக்கி வைக்க முடிவு செய்தார்.
போருக்கு முன்பாக, கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது செல்கிறார்.
அப்போது, அஸ்தினாபுர கோட்டையில் தங்காமல், விதுரரின் வீட்டில் தங்கி, மறுநாள் அரச சபையில் தான் தூது வந்ததனன் நோக்கத்தை கூறுகிறார். விதுரரும் அவருக்கு ஆதரவாக பேசுகிறார். இதில் கோபமடைந்த துரியோதனன், தன் சித்தப்பா விதுரரின் தாயின் குலத்தை பற்றி பேசி இகழ்ச்சி செய்தான். இதில் பெரும் கோபமடைந்த விதுரர், "என் தாயை அவதூறு செய்த துரியோதனனுக்கு என் வில் பயன்பட கூடாது" என கூறி தன் கோவர்த்தன வில்லை உடைத்து விட்டு, "நான் இந்த போரில் பங்கு பெற மாட்டேன்" என சூளுரைத்து புண்ணிய தல வழிபாட்டிற்கு சென்று விட்டார். போர் முடியும் வரை அவர் அஸ்தினாபுரம் திரும்ப வில்லை. இதுதான் கிருஷ்ணரின் சூட்சி. இவ்வாறு தான் கிருஷ்ணர், விதுரரை போரில் இருந்து விலக்கி வைத்தார்.
முன்பொரு காலத்தில், தர்மம் தன் பக்கம் இருந்த ஒரே காரணத்தினாலேயே, பீஷ்மர் தன் குருவான பரசுராமரையே போரில் வெற்றி பெற்றது நினைவு கூறத்தக்கது.
நியதி: "நீங்கள் தர்மத்தின் வழி நடப்பவராயின், அந்த இறைவனே நினைத்தாலும், உங்களை வெல்ல முடியாது. "
இதுவே தர்மத்தின் மகத்துவம்.

Comments